உலகம்

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்காவில் குடியேற தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்காவின் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர்-3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கும்  நிலையில், புதிய கொள்கை அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ALSO READ  உலகளவில் 14 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு !

சீனாவுக்கு எதிரான விமர்சனங்களை  டிரம்ப் காட்டமாக முன்வைத்து வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது வேறு எந்த சர்வாதிகாரக் கட்சியுடனும், உள்நாட்டு அல்லது வெளிநாட்டினருடன் உறுப்பினராக அல்லது இணைந்திருக்கும் எந்தவொரு நபரும் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் வேலைவாய்ப்பு, உணவுப் பொருட்கள் அல்லது பிற வாழ்க்கை அத்தியாவசியங்களுக்காக கட்சியில் சேரும்படி கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு இதிலிருந்து  விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  காபூலில் குருத்வாரா மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்- 27 சீக்கியர்கள் பலி....

தேசிய சட்டம் 1952 முதல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை விலக்குவது அமெரிக்க சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், புதிய வழிகாட்டுதல் இந்த விலக்கின் கொள்கை அமலாக்கத்தை புதுப்பிக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மறைந்த தினம்

Admin

சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

Admin

சீனா-பாகிஸ்தான் இடையே புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது:

naveen santhakumar