தொழில்நுட்பம்

இந்தியாவில் தனது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ நிறுவனம் திட்டம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒப்போ நிறுவனம் 2021-ம் ஆண்டு மட்டும் இந்திய சந்தையில் தனது 5ஜி ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ரெனோ5 ப்ரோ ஸ்மார்ட்போனினை முதல் 5ஜி மாடலாக இந்தியாவில் ஒப்போ அறிமுகம் செய்தது.2021-ம் ஆண்டில் மட்டும் ஒப்போ நிறுவனம் குறைந்தபட்சம் ஆறு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டு உள்ளது. அனைத்து விலை பிரிவுகளிலும் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டுள்ளது.

ALSO READ  ஸ்மார்ட்போன்கள் இதைவிட கேவலமானதா? ... அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் சீனா தவிர வெளிநாட்டு சந்தையில் தனது முதல் 5ஜி இன்னோவேஷன் ஆய்வகத்தை இந்தியாவில் ஒப்போ துவங்கி இருக்கிறது. சீனாவுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத் நகரில் ஒப்போ ஆய்வு மையம் கட்டமைத்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒப்போ ஆய்வு குழுவினர் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், குவால்காம், மீடியாடெக் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. தற்சமயம் உலகம் முழுக்க 20-க்கும் அதிகமான நாடுகளில் ஒப்போ தனது 5ஜி தொழில்நுட்பத்தை கட்டமைக்கும் பணிகளில் ஒப்போ ஈடுபட்டு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2019 ஆம் ஆண்டின் டாப் ட்விட் : விளையாட்டு துறையில் முதல் இடம் யாருக்கு தெரியுமா?

Admin

மிக மிக குறைந்த விலையில் மொபைல் அறிமுகம் :

Shobika

ATM கார்டு தொலைந்து விட்டதா?????இனி சுலபமாக உங்கள் மொபைலில் இருந்தே அதனை சரிசெய்யலாம்….

naveen santhakumar