தமிழகம்

தமிழகத்தில் தேர்தல் எப்போது; தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் இந்தாண்டு சட்ட மன்ற தேர்தல் நடக்கவுள்ளதை தொடர்ந்து ஆளும் கட்சி உட்பட பல காட்சிகள் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். அதனால் தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்னும் பிற காட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக  தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு நேற்று தமிழகம் வந்தது.  அதனையடுத்து அந்த குழு 2 நாட்களாக சென்னையில் ஆலோசனை நடத்தியது. அரசியல் கட்சிகள், தலைமைச் செயலாளர், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களோடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன்பின் பின் செய்தியாளர்களை சந்தித்தார் சுன்னி அரோரா. அப்போது “கொரோனா காலத்தில் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த வேண்டி உள்ளதால், சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்யப்படும் எனவும், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர் எனவும் சுனில் அரோரா தெரிவித்தார்.

ALSO READ  தமிழகத்தில் ஆட்சியமைக்க மு.க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு ! 

80 வயதை கடந்தவர்களுக்கான தபால் வாக்கு முறையை சில கட்சிகள் வரவேற்றுள்ளதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால்வாக்கு முறை பீகார் தேர்தலில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – கேக் ஊட்டி கொன்ற நண்பர்கள்

naveen santhakumar

கவர்னர் பயணத்தின் போது மக்கள் பாதிக்கப்பட கூடாது : கவர்னர் ஆர்.என்.ரவி

News Editor

3 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – காப்பகத்தில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு..

Shanthi