சினிமா

“சிலுக்கருப்பட்டி போல இது ஒரு அச்சுவெல்லம்” பாராட்டிய தள்ளிய சேரன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஹலீதா ஷமீம்  ‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக  அறிமுகமானர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சில்லுக் கருப்பட்டி’. ஆந்தாலஜி வகைத் திரைப்படமாக எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘ஏலே’ திரைப்படம், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதற்கு இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமின்றி, படக்குழுவினருக்கும் பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், ஏலே படம் பார்த்து நெகிழ்ச்சியடைந்த இயக்குநர் சேரன், அது குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், “ஏலே… எத்தனை பேர் பார்த்தீங்க நெட்பிலிக்ஸ்ல.. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள். மிகப்பிரமாதமாக, அதேசமயம் உண்மையாக வடிவமைக்கப்பட்ட புதிய கதாபாத்திரங்கள். தம்பி சமுத்திரக்கனிக்கு வாழ்த்துகள். அந்த கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு அப்பா மகனுக்கான உணர்வுகளைப் பார்வையாளனுக்கு கடத்துவது அற்புதம். ‘தவமாய் தவமிருந்து’ போன்ற அப்பாக்களின் மனதை அளந்துவிடலாம். இதுபோன்ற அப்பாக்களின் மனதில் கிடக்கும் அவலங்களை அலசுவதும் அவருக்காகக் கண்ணீர்விட வைப்பதும் சாத்தியம் குறைவான விசயம். அதில், ஹலிதா ஷமீம் வென்றிருக்கிறார்.

ALSO READ  அதிக பொருட்ச்செலவில் தயாராகும் வைபவ் திரைப்படம் !

திரையில் யூகிக்க முடியாத கதாபாத்திரங்களைக் கையாளுவதன் மூலம்தான் புதிய சினிமாக்கள் உருவாகும்.. அப்படிப்பட்ட ஒரு சினிமாதன் ஏலே. ‘சில்லுக்கருப்பட்டி’ போல இது ஒரு அச்சுவெல்லம். சமுத்திரக்கனி மூன்று மாதிரியான கதாபாத்திரங்களை வெளுத்து வாங்கியிருக்கிறான். இதெல்லாம் ஹீரோக்கள் செய்ய மறுக்கும் கதாபாத்திரங்கள். செய்து காட்டிவிட்டான் தம்பி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

#tamilmovie #tamilcinema #tamilthisai #aelay #lalithashiyam #samudhirakani #manikandan #cinemaupdate #cinema #cinematrending #cine #kollywood


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இப்படி மொக்கையா போஸ் கொடுக்காம… ஜூலிய பார்த்து எப்படி போஸ் கொடுக்கணும்னு கத்துக்கோ

naveen santhakumar

2020ம் ஆண்டு நீங்கள்தான்… பிக்பாஸ் கவினை வாழ்த்தும் ரசிகர்கள்

Admin

ஷங்கர் “இந்தியன் 2” படத்தை தவிர வேறு படத்தை இயக்க கூடாது; லைகா நிறுவனம் வழக்கு !

News Editor