இந்தியா

குஜராத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 26  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

ALSO READ  கொரோனா வைரஸை தடுக்க ஐடியா சொன்ன தலாய்லாமா

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில் நாளையிலிருந்து (17.03.2021) 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் கொரோனா அதிகரித்து வருவதை தொடர்ந்து, மக்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் திறக்கப்படாது – அரசு அறிவிப்பு..!!

naveen santhakumar

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தனது சேமிப்புத் பணத்தை வழங்கிய 12 வயது சிறுமி!

naveen santhakumar

பெண்களால் மட்டுமே பராமரிக்கப்படும் வஞ்சிநாத் எக்ஸ்பிரஸ்..!!!

naveen santhakumar