தமிழகம்

கொரோனா பரவல்; மருத்துவ குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை வீச தொடங்கியுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்  நேற்று ஒரே நாளில் 1385 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 496 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

ALSO READ  சென்னை தினத்தை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு!

தமிழகத்தில் சில நாட்களாக நோய் பாதித்தவரின் எண்ணிக்கை 1000 கடந்து வருகிறது. இதனிடையே நோய் தொற்று அதிகரித்து வருவாதல் மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவுடன் தலைமை செயலாளர் ராஜூவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

ALSO READ  தடுப்பூசி போட்டுக் கொள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தயக்கம் - அதிர்ச்சி தகவல்

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் !

News Editor

தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை !

News Editor

கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

News Editor