சினிமா

தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ளாதது குறித்து பூஜா ஹெக்டே விளக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடக்கவுள்ளது. “தளபதி 65” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். 

இந்நிலையில், தளபதி 65 படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆனால் இப்படத்தின் கதாநாயாகி பூஜா ஹெக்டே கலந்து கொள்ளவில்லை. 

இது தொடர்பாக நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், தளபதி 65 பட பூஜையில் இன்று என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் வேறொரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அதனால் தளபதி 65 பட பூஜையில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். இருப்பினும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  விவாகரத்து உண்மையே - நாக சைதன்யா - சமந்தா அறிவிப்பு …!

#thalapathy #vijay #master #tamilmovie #thalapathy65 #nelson #sunpictures #poojahegde #vjay #cinema #cinemtrending #kollywood #cine #cineupdate #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எனக்கு கொரோனா இல்லை; ராதிகா சரத்குமார் விளக்கம் !

News Editor

“இரும்புப் பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது”

Shanthi

குளியலுக்காக இருபதாயிரம் ருபாய் செலவு செய்த நடிகை :

Shobika