தமிழகம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும் மே – 2ல் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 16 வது சட்டப்பேரவைக்கான சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் அதிகமான பகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்றது. மேலும் இது ஜனநாயகத்திற்கு விரோதமான தேர்தல். ஆகையால் இந்த தேர்தலை தேர்தல் ஆணையம்  ரத்து செய்ய வேண்டும்.

ஜனநாயக விரோத முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை வரும் மே 2ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வழிகாட்டுதல்படி  புதிய தமிழக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது. 

ALSO READ  கொரோனா நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா !

இதில் புதிய தமிழக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஜனநாயக விரோத தேர்தலை ரத்து செய்யவும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூது போகாததால் டார்சர் – 17 வயது சிறுமி தற்கொலை ..!

naveen santhakumar

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை!

naveen santhakumar

90s ஃபேவரைட் விஜே ஆனந்தக்கண்ணன் திடீர் மறைவு- என்ன நடந்தது?

naveen santhakumar