தமிழகம்

ரயில்வே மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரையில் நாள்தோறும் சராசரியாக  1300 பேர் வரையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுகைகள் நிரம்பி வருகின்றது, தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை ரயில்வே மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றி வந்த 2 மருத்துவர்கள், 6 செவிலியர்கள் மற்றும் 2 மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஊழலில் முதல்வரை முந்திவிட்டார் எஸ் பி வேலுமணி  : ஸ்டாலின் விமர்சனம் 

மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்படுவது சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கள்ளச்சாராய உயிரிழப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்?

Shanthi

திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் :

Shobika

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு… 

naveen santhakumar