சுற்றுலா தமிழகம்

தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 6 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.அதேபோல் திருநெல்வேலியில் இருந்து இன்று மாலை 6.15 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

ALSO READ  தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் !

இந்த சிறப்பு ரயில் இருவழித்தடங்களிலும் கோவில்பட்டி,சாத்தூர்,விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல் ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ALSO READ  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குளித்தலை திமுக எம்எல்ஏ-க்கு கொரோனா… 

naveen santhakumar

அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் 15 நாட்கள் கடைகளை அடைக்க தயார்- வணிகர் சங்கப் பேரவை… 

naveen santhakumar

தமிழக அரசு ஏற்பாடு..!! பிளஸ் -2 படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

Admin