தமிழகம்

டெல்டா பிளஸ் கொரோனா மூன்றாவது அலையாக உருவாக வாய்ப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவாகும் என்று கூறப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ம.பொ.சிவஞானத்தின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ம.பொ.சி திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள டெல்டா பிளஸ் வைரஸ் முடிவுகள் மே மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட பகுப்பாய்வின் முடிவுகள் படி 9 பேரின் வீடுகள் மற்றும் வசிக்கும் பகுதிகள் தொடர்புகளை சோதனை செய்யப்பட்டது.

மேலும், டெல்டா பிளஸ் குறித்து அச்சப்பட வேண்டாம். அதேசமயம், இந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ்தான் மூன்றாவது அலையாக உருவாகும் என கூறப்படுகிறது.

ALSO READ  தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு :

இதனையடுத்து, உருமாற்றமடையும் வைரஸ்கள் குறித்து கண்டறிய சென்னையில் பரிசோதனை மையம் அமைக்கப்பட உள்ளது, கொரோனா உச்சம் குறைந்துள்ள நிலையில் பொது நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு மருத்துவமனைகளில் கவனம் செலுத்த மருத்துவமனை முதல்வர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

ALSO READ  9,10,11,12 வகுப்புகள் தொடங்க தயார் நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

டெல்டா பிளஸ் வைரஸ் பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், இதற்கான பரிசோதனை மையம் சென்னையிலேயே அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, 25 நாட்களுக்குள் பரிசோதனை மையம் தொடங்கப்படும்.

டெல்டா பிளஸ் தொற்று பாதித்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர். எனவே அந்த பகுதியை கட்டுப்படுத்தும் பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், மீண்டும் யாருக்கேனும் தொற்று உறுதி செய்யப்பட்டால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… கார், பைக், கறவை மாடு வென்ற வீரர்கள்!

naveen santhakumar

பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட காவல்துறையோடு இணைந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை

Admin

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Shanthi