உலகம் விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது இத்தாலி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:

யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கிடையே நடைபெற்றது

UEFA EURO Cup Winners (2021-1960): Italy won the European 2020 Championship  by Defeating England in Penalty Shootout (3-2)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (Euro) போட்டி, கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது. 24 நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.

இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை வந்துள்ளது என்பவது குறிப்பிடத்தக்கது.

இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷா, போட்டி தொடங்கிய 2 நிமிடத்திற்குள் முதல் கோல் அடித்தார். யூரோ சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், மிகக் குறைந்த நேரத்தில் அடிக்கப்பட்ட கோல் இதுவேயாகும்.

ALSO READ  பிடித்த பாடல்களை கேட்டபடியே உயிர்விட்ட கொரோனா பாதித்த பெண்.. மகள் கதறல்...

இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல் அடித்து அசத்தினார். 1-1 என்ற கோல் கணக்கில் சமமானது. எனவே ஃபெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.

ALSO READ  சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
Euro Cup 2020: Italy defeats England on penalties to clinch trophy

கிடைத்த வாய்ப்பில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடிதார்கள். யூரோ கால்பந்து கோப்பையை இத்தாலி வென்றது. இதன் மூலம், இரண்டாவது முறையாக, இத்தாலி அணி வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு 53 வருட கனவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்: ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியீடு

News Editor

அமீபாவால் உயிரிழந்த சிறுவன்:

naveen santhakumar

அடடே…!!!! இந்த ஐடியா கூட நல்லாதான் இருக்கு….கல்வி கட்டணத்திற்கு பதில் தேங்காய்…..

naveen santhakumar