தமிழகம்

9,10,11,12 வகுப்புகள் தொடங்க தயார் நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகள் தொடங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.

கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் அனைவரும் பணிக்கு வர  பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் | Dinamalar

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள் பின் வருமாறு:

1) பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்

2) ஒவ்வொரு வகுப்பறைகளிலும் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள்.

3) பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும்.

4) பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம்.

ALSO READ  போரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டும் ; அண்ணாமலை 

5) ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

6) வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர்.

7) வகுப்பறைகளிலும் , பள்ளி வளாகத்திலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

8) மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

9) அனைத்து ஆசிரியர்களும், பள்ளி அலுவலர்கள், அனைத்து அலுவலக ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம்.

10) பள்ளிகள் திறக்கும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள மேஜை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கழிவறைகள் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

ALSO READ  அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

11) அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

12) பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.

13) வகுப்பறை சிறிதாக இருக்கும்பட்சத்தில், கம்ப்யூட்டர் அறை, நூலகம், லேப் போன்ற இடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தலாம்.

Tamil Nadu COVID-19 wrap: Class 10-12 students allowed to return to schools  from Oct 1 | Cities News,The Indian Express

மேற்கண்டவாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குற்பியிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பஞ்சாப் தீவிரவாதி கைது!

Shanthi

உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை – தமிழக அரசு…!

News Editor

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் தந்தைக்காக எழுதிய கவிதை… 

naveen santhakumar