தமிழகம்

ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி – ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், இன்று (செப்.13) நகைக்கடன் தள்ளுபடி குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, சட்டசபை விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா பலி; உடலை அடக்கம் செய்யும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் !  

அறிவிப்பை வெளியிட்டு ஸ்டாலின் கூறியதாவது,

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் வரையிலான நகைக்கடன் சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.

தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒருமாத காலமாக 51 விதமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வுகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய ரூ.6,000 கோடி செலவாகும் என தெரியவந்துள்ளது. நகைக்கடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

ALSO READ  பேரவை வரலாற்றிலேயே முதல் முறை… கெத்து காட்டும் ஸ்டாலின்!

இதனிடையே கூட்டுறவு வங்கிகளில் 61 லட்சம் பேர் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிலை வைத்து வழிபட போகும் விவசாயிகள்:

naveen santhakumar

அஜித் பிறந்தநாளுக்கு விஜய் டிவி கோபிநாத் மகள் உருவாக்கிய ஸ்பெஷல் வீடியோ…

naveen santhakumar

தொடர் ATM கொள்ளைகளில் கைவரிசை காட்டியவர்களில் மேலும் ஒரு கொள்ளையன் கைது :

Shobika