தமிழகம்

இரவில் நிகழ்ந்த அதிசயம் – கண்டுகளித்த மக்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை மாவட்டம் அன்னூரில் நேற்று இரவில் அரிய மலர் வகையான நிஷாகந்தி பூத்தது. இதனை விடிய விடிய அப்பகுதி மக்கள் கண்டுகளித்தனர்.

சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பமான மலராக அறிவப்படுவது பிரம்ம கமலம் எனப்படும் நிஷாகந்தி. இது அனந்த சயன பூ என்றும் குறிப்பிடப்படுகிறது. மிகுந்த மணம் நிறைந்த இந்த பூவானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.

இது, இரவு நேரம் பூத்து அதிகாலையில் வாடிவிடும் குணம் கொண்டதாகவும் உள்ளது. அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே ஈர்க்கும் வல்லமை கொண்டது.

ALSO READ  ஊரடங்கு நீட்டிப்பு; ஜூன் முதல் இலவச மளிகை வழங்க உத்தரவு !

மலைப்பிரதேசத்தில் மட்டுமே இந்த செடிகள் அதிக அளவில் காணப்படும். சமநிலத்தில், ஒரு சிலர் தங்கள் வீடுகளில் இதை வளர்க்கின்றனர்.

மேலும், பிரம்மாவிற்கு உகந்த பூவான இந்த பிரம்ம கமலத்தின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போன்றும். அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும்.

நிஷாகந்தி

அதுமட்டுமல்லாமல், இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

ALSO READ  இன்று நிகழ்கிறது 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்
புத்தம் புது காலை : 'குலேபகாவலி' கதையும், ஓர் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும்  நிஷாகந்தி மலரும்! | stories behind Bethlehem Lily - Nishagandhi flower

அவ்வகையில், இந்த அரிய மலர் கோவை அன்னூரில் நேற்று இரவில் பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த மலரை, அக்கம் பக்கத்தில் வசிக்கும் ஏராளமான மக்கள் இரவில் காத்திருந்து பார்த்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஆர்வமுடன் பார்த்து இந்த பூவைப் பார்த்து பெரியவர்கள் தொட்டுக் கும்பிட்டு வணங்கினர். பூ பூக்கும் நள்ளிரவு வேளையில் இதை வணங்கி தங்கள் குறைகளை நீக்க வேண்டிக்கொண்டனர். இந்த அதிசய மலரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பம்!

Admin

ரேஷன் கார்டு புதிய வசதி – தமிழக அரசு அறிவிப்பு

naveen santhakumar

ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது : தமிழக அரசு

News Editor