இந்தியா

நாடாளுமன்றத்தில் சட்டம் ரத்தாகும் வரை போராட்டம் – விவசாய சங்கங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் டிவிட்.

இன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி,

Big Masterstroke Ahead of Elections: PM Modi Withdraws Farm Laws, Urges  Farmers to End Protest | LIVE

விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். எனவே எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

ALSO READ  புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் 75 வது சுதந்திரதின கொடியேற்றினார்கள்

மேலும் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு விவசாய சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ  நீட் தேர்வுக்கு ஆகஸ்ட் 10 வரை விண்ணப்பிக்கலாம்

அவரது அறிவிப்பில்,

Bill wapsi' will mean 'ghar wapsi': Rakesh Tikait nudges Centre to repeal  farm laws - India News

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உடனடியாக திரும்பப்பெறப்படாது. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என்று ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வேளாண் விளை பொருட்களுக்கு தக்க கொள்முதல் விலை அளிக்க வேண்டும் என்றும், மின்சார சட்டத்திருத்த மசோதாவையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Игры Казино Онлайн Бесплатн

Shobika

ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை தயார்- பிரதமர் மோடி

Admin

விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யக்கோரி வழக்கு:

naveen santhakumar