தமிழகம்

2 நாளைக்கு சரக்கு கிடைக்காது… டாஸ்மாக்கில் முண்டியடித்த குடிமகன்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொங்கல் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளில் அமோக மது விற்பனை நடைபெறும். வழக்கமாக பொங்கலுக்கு மறுநாள் (15-ந்தேதி) திருவள்ளுவர் தினம் கடை பிடிக்கப்படுவதால் அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.
இந்த ஆண்டு பண்டிகை நேரத்தில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதா தாக்கல் !

இதனால் ஜனவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இன்று சரக்கு வாங்க குடிமகன்களின் கூட்டம் முண்டியடித்தது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் சமூக இடைவெளி இன்றியும், மாஸ்க் அணியாமலும் மதுப்பிரியர்கள் மது வாங்க திரண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படாததால் தொற்று தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

43வது சென்னை புத்தக கண்காட்சி தொடக்கம்

Admin

மரணத்தின் விளிம்பில் சிறுவன்; அரசின் உதவியை எதிர்பார்த்து ஏழை குடும்பம்

naveen santhakumar

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையம் முயற்சி

News Editor