சாதனையாளர்கள்

13 வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

13 வயது சிறுவன் கண்டுபிடித்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில்(Google play store) சேர்க்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி நாகலட்சுமி வடமதுரை மம்மானியூர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் எம்.என்.பிரனேஷ் (13). இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த மாணவன் ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வியை கற்று வரும் நிலையில், இவர் “ஜெட் லைவ் சாட்(jet live chat)”என்ற செயலியை உருவாக்கி கூகுளில் சேர்க்க விண்ணப்பித்தார். செயலியை பரிசீலித்த கூகுள், பல கட்ட ஆய்விற்கு பின் அங்கீகரித்து தற்போது இந்த சிறுவன் உருவாக்கிய செயலியை பிளே ஸ்டோரில்(playstore) சேர்த்துள்ளது.

ALSO READ  பாட்டியை கட்டிபிடிக்க சுமார் 2800கி.மீ நடந்து சென்ற சிறுவன்:

இதுகுறித்து மாணவன் பிரனேஷ் கூறுகையில், ‘இந்த செயலியை 2 வார முயற்சியில் உருவாக்கினேன். இந்த செயலியின் சிறப்பு அம்சமாக ஆடியோ, வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதிகளவு MB., கொண்ட ஃபைல்களையும் அனுப்பலாம். உதாரணமாக ஒரு முழு திரைப்படத்தையே அனுப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், முகநுாலில்(facebook) ‘லைக்’ பதிவிடுவது போல இந்த செயலியில் அனுப்பப்படும் தகவல்களின் மீது 1000க்கும் மேற்பட்ட குறியீடுகளை கொண்டு கருத்து பதிவிடும் வாய்ப்பும் உள்ளது என்றும், எனது செயலிக்கு(app) 2048 ஆண்டு வரை கூகுள் ஒப்பந்தம் செய்து தந்துள்ளது. 

ALSO READ  உரிமைப் போராளி மேதா பட்கர் பிறந்த தினம்

2018-ம் ஆண்டு பிந்தைய மாடல் வெர்ஷன்களில்(version) பதிவிறக்கம்(download) செய்து பயன்படுத்தலாம். அதற்கு முந்தைய மாடல் போன்களில் ‘அப்டேட்'(update) செய்து கொள்ள வேண்டும் என்றும் இந்த செயலி குறித்து மாணவன் பிரனேஷ் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நடந்த சுவாரசியமான விஷயம்

News Editor

சில மனிதர்கள்… சில நினைவுகள் (கண் ஒளி வழங்கியவர்)…பகுதி – 13

naveen santhakumar

ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

Admin