ஜோதிடம்

மாசி மாத பலன்கள்…மனநிறைவான வாழ்க்கையை பெறும் மீன ராசிக்காரர்களே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராசிஅதிபதி குரு பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதும் இந்த அமைப்பு ராசிக்கு யோகாதிபதியான செவ்வாயுடன் இணைந்து இருப்பதால் மிகச்சிறந்த மாதமாக இது மீனத்திற்கு அமையும். ராசியில் உச்சம் பெற்று சுக்கிரன் அமைந்திருப்பதும் மற்றொரு சிறந்த யோகமாகும். கோச்சார நிலையில் எல்லா கிரகங்களும் மீனத்திற்கு அதிர்ஷ்டத்தை தர கூடிய நிலையில் உள்ளதால் இது ஒரு சிறந்த மாதமாகவே அமையும்.

ராசிநாதன் குரு பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்ற நிலையிலிருந்து ஆறாம் இடத்தை பார்ப்பது இதுவரை கடன் நோய் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும் என்பதை உணர்த்துகிறது. பொருளாதார நிலையிலும் நல்ல மேம்பாடு இருக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். பெண்களால் மிகுந்த திருப்தியும் மனநிறைவும் ஏற்படும். அவர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பெண் நண்பர்கள் கிடைப்பார்கள். வெகுநாட்களாக வீட்டிற்கு வாங்கிப் போடவேண்டும் என்று நினைத்து இழுத்துக் கொண்டிருந்த விஷயங்களை செய்து முடிப்பீர்கள். இதுநாள் வரை உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் தீரும்.

வியாபாரம் செழிப்பாக நடக்கும். வேலையில் இதுநாள்வரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் ஒரு சுமூகமான தீர்வுக்கு வரும்.நான்காமிடத்தில் திருவாதிரையில் பயணிக்கும் ராகு தாயாருக்கு உடல்நலக்குறைவு பாதிப்பையும் ஏற்படுத்துவார். தாயார் வழி உடல்நலனில் கவனம் தேவை. தாயார் மூலம் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு வீடு மற்றும் வாகனம் மாற்றம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதன் மூலம் செலவுகள் வரலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.

ALSO READ  இசையமைப்பாளரும்,இளம் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பிகில் பட நடிகை ஒப்பந்தம் :

பெண்களுக்கு இது சிறப்பான மாதமாக அமையும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு இது ஒரு சிறந்த மாதமாக அமையும் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். வருமானம் வரும் வழியை சொல்லும் இடமான இரண்டாம் இடத்தின் அதிபதி ராசி அதிபதியான குரு உடன் இணைந்த நல்ல நிலைமையில் இருப்பது இந்த மாதம் முழுவதும் நல்ல பணவரவு இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. மீனத்திற்கு இது ஒரு சிறந்த மாதம் என்று தான் சொல்ல வேண்டும்.சந்திராஷ்டம நாட்கள் அன்று அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.

சந்திராஷ்டம நாட்கள்: 12-ம் தேதி மாலை 4:33 முதல் 14-ம் தேதி அதிகாலை 6:45வரை. வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்.

ALSO READ  'ஐ லவ் யூ மாமா' என சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்..!

இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர்(DNA astrologer). மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்

https://www.youtube.com/channel/UCHm8-oM7fQYJc7PJWtut9JA


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நோய் நொடி நீங்க பாம்பாட்டி சித்தர் குகைக்கு போய் வாங்க.!!!!!

naveen santhakumar

காகத்திற்கு உணவு வைப்பது ஏன்?? வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன??!! 

naveen santhakumar

கருவூரார் எனும் கருவூர் சித்தர்

Admin