சினிமா

“விஸ்வாசம்” படத்திற்காக அஜித்தை பாராட்டிய விஜய்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஸ்வாசம் படம் பற்றி நடிகர் அஜித்துக்கு போன் செய்து நடிகர் விஜய் பாராட்டியதாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் அஜித்- விஜய் ரசிகர்கள் இடையேயான ஹேஸ்டேக் மோதல்கள் பற்றி பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம். பல நேரங்களில் வரம்பு மீறும் இவர்களின் சண்டைகள் தான் பலருக்கும் பொழுதுபோக்கு.

தினசரி இருவரின் பெயரில் ஏதாவது ஒரு ஹேஸ்டேக் ட்ரெண்டாகும். இல்லை ட்ரெண்டில் வைக்கப்படும். ஆனால் ஆஃப் ஸ்கீரினில் அஜித்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் என பலர் சொல்லியும் ரசிகர்கள் திருந்துவதாக இல்லை.

ALSO READ  காதல் திருமணம் குறித்து கயல் ஆனந்தி விளக்கம்..!

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல வார இதழ் நடத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் பல விருதுகளை வென்றது. இந்த விருதுகளை வழங்கிய இயக்குநர் எஸ். ஏ.சந்திர சேகரன், மேடையில் பேசும் போது அஜித்- விஜய் இடையேயான உறவு குறித்தும் பேசியுள்ளார்.

மேலும் விஸ்வாசம் படம் வசூலில் சாதனை படைத்ததை கேள்விப்பட்ட நடிகர் விஜய், நடிகர் அஜித், இயக்குனர் சிவா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட் வெளியீடு !

News Editor

பினராயி விஜயனுடன் செல்ஃபி எடுத்து கொண்ட பிரனவ் நடிகர் ரஜினியுடன் சந்திப்பு

Admin

அய்யோ!!!!!!இந்த இயக்குநர் வீட்ல இப்படி ஒரு துக்கமா?????

naveen santhakumar