சினிமா

நடிகர் ‘தனுஷ்’ போயஸ் கார்டனில் பூமி பூஜை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தனுஷ் 43’ படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ALSO READ  ஜார்ஜியா படப்பிடிப்பில் விஜய்; இணையத்தை கலக்கும் புதிய புகைப்படம் !

‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திற்காக நடிகர் தனுஷ் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அப்படத்தை முடித்து விட்டு மே மாதம் சென்னை திரும்பவுள்ள தனுஷ், ‘தனுஷ் 43’ படக்குழுவினரோடு மீண்டும் இணையவுள்ளார். 

இந்த நிலையில், நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் புது வீடு கட்டுவதற்கான பூமி பூஜையை இன்று நடத்தினார். இதில், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உட்பட தனுஷ் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.

ALSO READ  அஞ்சலக தேர்வு இனி தமிழில் எழுதலாம் !

அதனையடுத்து இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரையரங்கை விட்டு ஓடிடிக்கு சென்ற திரைப்படம்; ‘கர்ணன்’ பட நடிகை அறிவிப்பு !

News Editor

கர்ணனாக மாறும் தனுஷ்

Admin

மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு

Admin