சினிமா

அடுத்தடுத்து வெளியான அருண் விஜய் படத்தின் அப்டேட்; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகினார்.  இவர் தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அறிவழகன் கடந்த 2017 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற குற்றம் 23 படத்தை இயக்கிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

தற்காலிகமாக ‘அருண் விஜய் 31’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் தில்லார் கிரைம் பாணியில் தயாராகி வருகிறது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தறிக்கும் இப்படத்திற்கு  சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத், டெல்லி என முழுவீச்சில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது அடுத்து டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

இதனையடுத்து நேற்று படத்தின் டைட்டில் மோஷன் விடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் படத்திற்கு பார்டர் என பெயரிடப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் வெளியான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  

ALSO READ  செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம் !

#Arunvijay #AV31 #ActorArunvijay #TamilThisai #cinema #Cinemanews #Kollywood #Arivazhagan #ReginaCassandra

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுறுசுறுப்பு நாயகி- பிரியா பவானி சங்கர்…

naveen santhakumar

பாடலாசிரியர் சினேகன் காரில் அடிபட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :

naveen santhakumar

ஒரே ஒரு போன் கால்…விக்ரமோட மொத்த நிம்மதியும் போச்சு…..

naveen santhakumar