சினிமா

“டெடி” படத்தில் பொம்மையாக நடித்தவர் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள திரைப்படம் ‘டெடி’.  காமெடி கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இதில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் மார்ச் 12 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில்  வெளியாகியது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் “டெடி படத்தில் ஆர்யாவிற்கு இணையாக அந்த பொம்மை கதாபாத்திரமும் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் டெடி பொம்மையாக நடித்தவர் யார் என்பதை அந்தப்படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “டெடி பட காட்சிகளின் பின்னால் இருக்கும் மனிதர் இவர் தான், மிஸ்டர் கோகுல். மேடை நாடக நடிகரான இவர், பொம்மைக்குரிய ஆடையை அணிந்து அந்த டெடியின் உடல் மொழியை வெளிப்படுத்தினார். தலையை மட்டும் 3டி முறையில் உருவாக்கி, ‘பர்பாமன்ஸ் கேப்சர்’ எனும் டெக்னாலஜியை பயன்படுத்தி படமாக்கியதாக கூறியுள்ளார்.


Share
ALSO READ  அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பீட்டர்-வனிதா ஜோடி உடைகிறதா?????வனிதாவின் நீண்ட நெடிய விளக்கம்:

naveen santhakumar

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி !

News Editor

இந்திய செவ்வியல் இசை பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மரணம்:

naveen santhakumar