சினிமா

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி !

இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல திரை பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் இயக்குநர் எஸ்.பி முத்துராமன் உடல்நல குறைவு மற்றும் கொரோனா அறிகுறியுடன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனையடுத்து அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரின் உடல்நிலையில் சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. 


இயக்குநர் எஸ்.பி முத்துராமன் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்.,ரஜினிகாந்த்,கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

#corona #CoronaPositive #Coronavirus #TamilThisai #coronapositive #DirectorSPmuthuraman #SPmuthuraman

Related posts

“தி கிரேட் இந்தியன் கிட்சன்” ரீமேக்கில் பிரபல நடிகை ஒப்பந்தம்..!

News Editor

பிரபல இசையமைப்பாளர்  முதல் முறையாக பாலா படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்

News Editor

“மாறா” படத்தின் டிரைலர் வெளியீடு…!

News Editor