சினிமா

நீண்ட காத்திருப்புக்கு பிறகு  வெளியானது வலிமை படத்தின் அப்டேட்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் H.வினோத்  தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, சதுரங்க வேட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது அஜித்யை வைத்து ‘வலிமை’ என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார். அஜித்தின் முந்தைய படம்  நேர்கொண்டபர்வை. 

இது  இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தின் தமிழ் ரிமேக் ஆகும். இந்த படத்தினை தமிழில் வினோத்  நடிகர் அஜித்தை வைத்து இயக்கி இருந்தார். இந்த நிலையில்தான் அஜித்தின் அடுத்தப்படத்தினையும் H.வினோத் தான் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியது. அதன் பின்னர் இந்த படத்திற்கு பிரபல தயாரிப்பாளரான ‘போனி கபூர்’ தயாரிக்கிறதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியது.

பின்னர் அந்த திரைப்படத்திற்க்கு அஜித்தின் ” V “செண்டிமெண்ட் காரணமாக வலிமை என்று பெயரிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் படக்குழு மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் பூஜை சென்ற ஆண்டே போடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவியதால் அரசு ஊரடங்கை அமல்படுத்தியது.

ALSO READ  இந்திய நிகழ்த்திய வரலாற்று சாதனை; 32 ஆண்டுகளுக்கு பிறகு பிரிஸ்பேனில் மண்ணை கவ்வியது ஆஸ்திரேலிய..!

இந்த நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுபோனது. இந்த நிலையில்தான் அரசு சினிமா படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ளலாம் என்று அறிவித்ததன் மூலம் தற்போது ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்யில் நடைபெற்று வருகிறது.

ஆனால் ‘வலிமை’ படத்தினை பற்றி இதுவரை எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆகையால் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரியிடம் சமூக வலைதளத்தின் மூலம் கேட்டு வருகின்றனர். அண்மையில் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கான  இசைப் பணியை மேற்கொண்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

ALSO READ  அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் !

இந்நிலையில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் ‘கூக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ‘புகழ்’ நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பிலிருந்து எதுவும் கூறப்படவில்லை, குறிப்பாக மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#ajithkumar #ajith #cookwithcomali #vinoth #valimai #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடியுடன் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்

naveen santhakumar

வெளியானது “வாடிவாசல்” படத்தின் புதிய அப்டேட் !

News Editor

TRP யில் பிகிலை வேட்டையாடிய விஸ்வாசம்…கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்

Admin