சினிமா

“கோடியில் ஒருவன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் ஆண்டனி முதல் முறையாக கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பலப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் கொலைகாரன். இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனையடுத்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் படம் “கோடியில் ஒருவன்”. இந்த படத்தில்  அவருக்கு ஜோடியாக  ஆத்மீக நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசமைக்கிறார். 

ALSO READ  க/பெ.ரணசிங்கம் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சசிகுமார்!

படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தீபாவளி அன்று படத்தின் ஃபஸ்ட்  லுக் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில்  படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், கோடியில் ஒருவன் படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராஜ்கிரண் மகன் இயக்கம் “ஏன் ராசாவின் மனசிலே 2′;அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

News Editor

நெற்றிக்கண் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor

“சித் ஸ்ரீராம் குரல் எதையும் சிறப்பானதாக ஆக்கும்” : மிஸ்கின் பாராட்டு 

News Editor