சினிமா

‘தட்டி புட்டா’ பாடலை வெளியிட்ட மாமனிதன் படக்குழு !

சீனு ராமசாமி இயக்கத்தில்  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன், தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி சேர்ந்து உள்ளதால் மாமனிதன் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இதனை தொடர்ந்து இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, தயாரித்தும் உள்ளார்.இப்படத்தில் இளையராஜாவும்- யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்தே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் மாமனிதன் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தயாரிப்பு தரப்பிலிருந்து ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக படத்தின் ரிலீஸ் தடைபட்டு போனது. 

இந்நிலையில் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தற்போது முடிவு வந்திருக்கும் நிலையில் மாமனிதன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான தட்டி புட்டா பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பா.விஜய் எழுதி இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

#Maamanithan #TamilThisai #Tamilcinema #Tamilmovie #Cinema #CIneUpdate #CInemanews #Cinematrending #Kollywood #VijaySethupathi #Gayathiri #ThattiPutta

Related posts

சுரேஷ் என்னை ட்ரிகர் செய்கிறார்…. அனிதா சம்பத்

naveen santhakumar

மீண்டும் ஒரு உலக புகழ் பெற்ற விருதுக்கு ‘சூரரை போற்று’ தேர்வு !

News Editor

மூன்று தேசிய விருது பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் வனிதா விஜயகுமார் !

News Editor