சினிமா

“சீயான் 60″யில் இருந்து அனிருத் விலகியதற்கான காரணத்தை வெளியிட்ட படக்குழு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இவர் தற்போது  இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் “பொன்னியின் செல்வன்” படத்திலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் “கோப்ரா” படத்திலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து இவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் “விக்ரம் 60” படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக ‘சீயான் 60’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லலித் தயாரிக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை முடித்துள்ள நிலையில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளார். வாணி போஜன், பாபி சிம்ஹா இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்த இப்படத்திற்கு தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் சீயான் 60 படத்தில் இருந்து அனிருத் விலகியதற்கான காரணம் சொல்லப்படவில்லை. 

ALSO READ  கூகுள் குட்டப்பா- பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு சூர்யா உதவி

இந்நிலையில் தற்போது படக்குழு இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதில், அனிருத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட வேலைகளில், பிஸியாக இருப்பதால், அவரால் ‘சியான்-60’ படத்தில் பணிபுரிய முடியவில்லையாம். அதனால்தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது.

#Chiyaan60 #TamilThisai #Aniruth #santhoshnarayaanan #Tamilcinema #TamilMovie #dhruvvikram #Vikram #Simran #Vanibhojan #KarthikSubbaraj #Cineupdate #Kollywood


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவை கலக்கும் தமிழ் கிராமிய பாடல்…..

naveen santhakumar

படப்பிடிப்பு தளத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் சாக்‌ஷி அகர்வால் பிறந்தநாள் கொண்டாட்டம் :

Shobika

சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியது..!

News Editor