சினிமா

ஷங்கர் படத்தில் இணைந்த கியாரா அத்வானி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து என பல்வேறு பிரச்சனைகளால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

அதேபோல் இயக்குனர் ஷங்கர் பாலிவுட்டில் நடிகர் ரன்வீர்சிங்கை இயக்கவுள்ளதாகவும் அந்த படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தின் ரீமேக் எனவும் சொல்லப்படுகிறது. 

ALSO READ  ஆஸ்கர் விழாவில் மறைந்த இந்திய நடிகருக்கு அஞ்சலி !

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

#kiaraadvani #Shankar #Ramcharan #RanveerSingh #Tamilcinema #Cinema #Bollywood #Tollywood #cinema #cineupdate #TamilThisai #Indian2


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடேங்கப்பா!!!!!ஒரு குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு சம்பளம் இவ்ளோவா!!!!!!

naveen santhakumar

‘விக்ரம் பிரபு’ நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

News Editor

படப்பிடிப்பின்  இறுதி நாளை கேக் வெட்டி கொண்டாடிய ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழு  

News Editor