உலகம் சினிமா

திரைப்படங்களில் வில்லன்கள் ஐஃபோன்களை பயன்படுத்த கூடாது – ஆப்பிள் நிறுவனத்தின் புது விதிமுறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லாஸ் ஏஞ்சல்ஸ்:-

திரைப்படங்களில் வில்லன்கள் அல்லது எதிர் கதாபாத்திரங்கள் இனி ஐஃபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார்.

வேனிட்டி ஃபேருடன் (Vanity Fair) நடந்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் இயக்குநர் ரியான் ஜான்சன் (Rian Johnson). அவரது சமீபத்திய மிஸ்ட்ரி படமான நைஃப்ஸ் ஆவுட் (Knifes Out)-ல் இடம்பெற்ற காட்சிகள் குறித்து பேசினார். 

ALSO READ  கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சோனு சூட் !    

அப்போது திரைப்படங்களில் ஐபோன் பயன்படுத்துவது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரஸ்மான ரகசிய தகவல்களை வெளியிட்டார்.

மர்ம திரைப்படங்கள் எடுக்கும்போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐஃபோன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் ஜான்சன் குறிப்பிட்டார்.

ALSO READ  பழம்பெரும் நிறுவனத்தை 61 ஆயிரம் கோடிக்கு வாங்கிய அமேசான் !

மேலும், செல்போனை மையப்படுத்தி மர்ம படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த தகவலால் என்னை கடிந்துக்கொள்வார்கள் என நகைச்சுவையாக  தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நடிகரின் மனைவிக்கு ரத்த புற்று நோய் !

News Editor

ஜப்பானின் அடுத்த பிரதமரானார் ஃபுமியோ கிஷிடா…!

News Editor

ஈரானின் செய்தி இணையதளங்களை அதிரடியாக முடக்கிய அமெரிக்கா :

Shobika