சினிமா

மலையாள ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்; ஷூட்டிங்கை தொடங்கிய படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் தயாராகிய படம்  “தி கிரேட் இந்தியன் கிட்சன்”. இந்த படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி  ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

பெண்களின் சுய வாழ்வியலை அழிக்கும் ஆணாதிக்க வர்க்கத்தின் முகத்தை கலப்படம் இல்லாமல் தோலுரித்து காட்டியுள்ளது “தி கிரேட் இந்தியன் கிட்சன்” திரைப்படம். அதனால் ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் மத்தியில் வரவேற்புகளையும் பாராட்டுகளையும் பெற்றது.

இந்த படத்திற்கு மலையாளத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, பிற மொழியிலும் ரிமேக் செய்ய பலர் முயற்சித்தனர். அந்தவகையில் இயக்குனர் கண்ணன் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கவுள்ளார். நிமிஷா, சுஜயன் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். 

ALSO READ  சீனாவில் 24 மணி நேரமும் இயங்கும் சுடுகாடுகள்...

முதல் நாள் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். சென்னையைத் தொடர்ந்து காரைக்குடியிலும் படப்பிடிப்பு நடை பெறுகிறது.  பிரபல தெலுங்கு இயக்குனர் ராகுல் ரவீந்திரன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. 

#thegreatindiankitchan #TamilThisai #tamilcinema #Tamilmovie #aishwaryarajesh #RaghulRaveenthiran #cinemaupdate #cinenews


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் உயிரிழந்த விஜய் பட நடிகர் ! 

News Editor

ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள்?

Shanthi

மூக்குத்தி அம்மன் சீக்ரெட் சொன்ன ஆர்.ஜே.பாலாஜி

Admin