சினிமா

ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஷார்ஜாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு நேற்று இரவு தனி விமானத்தில் நாடு திரும்பிய ஷாருக்கானை சுங்க அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு நேற்று இரவு தனி விமானத்தில் மும்பை விமான நிலையம் வந்த ஷாருக்கான் சொகுசு கடிகாரங்கள் உள்ளிட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள சில பொருட்களை வைத்திருந்தாகவும், இதனால், ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரித்ததாகவும் தெரிகிறது.

மேலும் சுங்க வரியாக ரூ.6.83 லட்சம் கட்டணம் செலுத்தினால்தான் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேற ஷாருக்கானுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் ஷாருக்கான் மற்றும் அவரது மேலாளர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டாலும், ஷாருக்கான் உடன் வந்த மேலும் சிலரை இரவு முழுக்க சுங்கத்துறை அதிகாரிகள் வெளியேற அனுமதிக்காமல் இன்று காலை தான் வெளியே செல்ல அனுமதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
ALSO READ  இத்தனை பேர் பாலியல் தொல்லை கொடுத்தார்களா..???? அதிரவைக்கும் ரேவதி சம்பத்.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மற்ற நடிகைகளை தெறிக்க விடும் அனுஷ்கா……OTT விலை கேட்டு அதிரும் கோலிவுட் வட்டாரம்…..

naveen santhakumar

எங்களுக்கு கொரோனாவா??- நயன்தாரா, விக்னேஷ் சிவன் விளக்கம்… 

naveen santhakumar

வெப் தொடர் சர்ச்சை : மீண்டும் இணைய தொடரில் நடிக்கும் பிரபல நடிகை…!

naveen santhakumar