சினிமா

சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிலம்பரசனுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டைத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

Silambarasan: 'I hope 'Eeswaran' and 'Master' helps revive Tamil cinema's  fortunes' - The Hindu

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் பிரச்சினை உண்டானது.

இதேபோல சிம்புவால் பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் சிம்புவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்தது.

இதனால் அவரின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற கூடாது எனவும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டதாக பெப்சி அறிவித்தது.

இதனிடையே, இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படத்தில் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ  சர்வதேச விருதுகளை வென்ற  படத்தின் பாடலை வெளியிட்டார் : சீமான் 

இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலம்பரசனின் தாயார் உஷா, மகனின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் இப்படி செய்வதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கியுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவித்துள்ளது.

ALSO READ  சிம்பு பாடிய "யாரையும் இவளோ அழகா பார்க்கல" பாடல் இணையத்தில் வைரல் !

திரைப்பட படப்பிடிப்புகளில் சரிவர கலந்து கொள்ளாததால் நஷ்டம் அடைந்ததாக மைக்கேல் ராயப்பன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ரெட் கார்டு நீக்கப்பட்ட நிலையில், நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஜினிகாந்த் வீடியோவை அதிரடியாக நீக்கிய ட்விட்டர் நிறுவனம்…

naveen santhakumar

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிய நடிகைக்கு 20 லட்ச ரூபாய் அபராதம்…!!!!

Shobika

வெற்றி பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணையும் ஜி.வி பிரகாஷ்..! 

News Editor