இந்தியா

1.6 கிலோமீட்டர் மலைச் சுரங்கப்பாதை திறப்பு – மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சூர்:

தமிழகத்திலிருந்து கோவை வழியாக கேரளாவின் பாலக்காடு-திரிச்சூர் நெடுஞ்சாலையில் செல்லும்போது வாளையாறு சோதனைச் சாவடியை கடந்து மலைப்பாங்கான மற்றும் குறுகிய வழிப் பகுதி வழியாக செல்ல வேண்டும். இது மிக குறுகிய பாதை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துக்களும் நிகழ்ந்து வந்தது.

இதனால் கேரளா செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். எனவே பீச்சி – வாழஹனி வனவிலங்கு சரணாலய பகுதியில் மலையை 1.6 கிலோமீட்டர் குடைந்து இரண்டு சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

ALSO READ  முன்னிலை வகிக்கும் கமல்; பின்னடைவை சந்திக்கும் காங்கிரஸ் !
One tunnel in Kuthiran opens for traffic | Kuthiran tunnel|  Thrissur-Palakkad Highway

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வடக்கஞ்சேரி – மன்னூத்தி மார்க்கத்தில் வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் 1.6 கிலோமீட்டர் தூரத்துக்கு 2 சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஒரு வழியில் சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து ஒரு வழி மட்டும் பொதுப் போக்குவரத்துக்காக கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் வாகனஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ALSO READ  20 லட்சம் கோடியில் என்னென்ன திட்டங்கள்? - விவரங்களை வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்...

இன்னொரு சுரங்கப்பாதையில் நிலுவைப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடல் – அரசு அறிவிப்பு

naveen santhakumar

лучшие Букмекерские Конторы Рейтинг Букмекеров Топ Бк 2024 Онлайн Ставки На Спор

Shobika

Azərbaycanda mərc oyunları şirkəti Baxış və rəylə

Shobika