இந்தியா

கொரோனா தடுப்பூசிகளில் 50 சதவீதம் இந்தியாவுக்கே, தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசம்- அடர் பூனவல்லா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசிகளில் 50 சதவீதம், இந்தியாவுக்கே வழங்கப்படும் இதனால்  மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) அடர் பூனவல்லா (Adar Poonawalla) தெரிவித்துள்ளார்.

உலகில் தடுப்பூசி தயாரிப்பில் முன்னனியில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் (Serum Institute of India) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக (Oxford University) உருவாக்கியுள்ள தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மனித சோதனைகளை, இந்தியாவில் நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ALSO READ  தீயாக பரவும் கறுப்பு பூஞ்சை; தமிழகத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு !

இதுதொடர்பாக கூறிய அவர்:-

தடுப்பூசி சோதனைகள் சிறப்பாக நடந்து முடிவுகள் சாதகமாக இருந்தால், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தங்கள் நிறுவனம் தயாரிக்கும்.

மேலும், நாங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளும் 50% இந்தியாவிற்கே வழங்கப்படும் மீதமுள்ள தடுப்பூசிகள் மட்டுமே மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும். எனில் ஒட்டு மொத்த உலகத்திற்கும் சமமான நோய் எதிர்ப்பு திறனை உண்டாக்குவது முக்கியமான ஒன்று. அரசு இதை கொள்முதல் செய்வதன் மூலம் நோய்த்தடுப்பு நடவடிக்கையின் மூலம் மக்களுக்கு அம்மருந்து இலவசமாகவே கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

ALSO READ  இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணம் !

இந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதத்தில் சில மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் தயாரிப்பதற்கு சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் அடுத்த ஆண்டு 300-400 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள்  தயாரிக்கப்பட உள்ளது என்று கூறினார். 

மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் இந்தத் தடுப்பூசிகள் 2-3 டாலர் மதிப்பில் விற்பனை செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெலுங்கானாவில் பட்டாசு விற்க,வெடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியது:

naveen santhakumar

வைகை எக்ஸ்பிரசுக்கு 40 வயசாச்சு

News Editor

2024-ல் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சியைப் பிடிப்போம்..

News Editor