தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இதனிடையே கருப்பு பூஞ்சை தொற்றும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளரான பொன்.கலியபெருமாள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி பொன்.கலியபெருமாள் மரணமடைந்துள்ளார்.
இதைப்போல கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யாசாமி தற்போது உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தற்போது கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.