இந்தியா

கொரோனா 2-வது அலை: 594 மருத்துவர்கள் உயிரிழப்பு ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை வேகமாக பரவியதுடன், அதிக உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா தடுப்பு பணியில் உயிரையும் பொருட்படுத்தாமல் இடைவிடாமல் பணியாற்றும் மருத்துவர்கள், உயிரிழப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. முதலாவது கொரோனா அலையின் போது மொத்தம் 736 மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

ALSO READ  கொரோனா பீதியிலும் ஆட்டம் பாட்டம் என கொண்டாடும் இத்தாலி மக்கள்.!!!!
கொரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழப்பு – 726 பேருக்கு தொற்று – Kalaikathir  News Paper From Jaffna : காலைக்கதிர் -நாளிதழ் – காலை மாலை பதிப்புகள்

இந்த நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 594 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அதிகபட்சமாக டெல்லியில் 107 டாக்டர்கள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளனர். பீகாரில் 96 டாக்டர்களும், உத்தர பிரதேச்ததில் 67 டாக்டர்களும், தமிழகத்தில் இதுவரை 21 டாக்டர்களும் உயிரிழந்தாக கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ட்ராக்டர் பேரணியில் நடந்த வன்முறைக்கு காரணமானவர் கைது !  

News Editor

மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு!

Shanthi

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.

naveen santhakumar