பிஜிஎம்ஐ எனப்படும் பப்ஜி மொபைல் விளையாட்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. பிஜிஎம்ஐ எனப்படும் பப்ஜி மொபைல் விளையாட்டை கடந்த 10 மாதங்களுக்கு முன் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்திருந்த நிலையில் மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் குறுகிய காலத்திலேயே பப்ஜி விளையாட்டு அதீத வரவேற்பை பெற்றது.

எனினும், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்த போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் சுமார் 10 மாதங்களாக பிஜிஎம்ஐ விளையாட்டு தடை அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது பப்ஜி விளையாட்டுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.