இந்தியா

ஓடிப்போன சம்மந்திகள் சோகத்தோடு ரிட்டர்ன்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூரத்:-

சூரத்தை சேர்ந்த அந்த 48 வயதுடைய நபர் தனது மகனுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தார். ஆனால், அந்தப் பெண்ணின் தாயார் வேறு யாருமல்ல, மாப்பிள்ளையின் தந்தையின் சிறு வயது காதலி. ஆம், ‘நாட்டாமை’ செந்தில்- கவுண்ட மணி கதை போலவே இருக்கிறதல்லவா..!

இவர்களில் இளம் வயதில் இவர்களின் காதலுக்கு இரு வீடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல், வீட்டில் சொன்னவர்களை திருமணம் செய்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமா பிரிந்து போனார்கள்.

இந்த நிலையில்தான் இவர்களின் பிள்ளைகளுக்கு திருமண நிச்சயம் செய்தனர். இந்த சமயத்தில் இவர்களின் பழைய காதல் வந்து மனசை பிறாண்ட இருவரும் ஓடிப் போய் விட்டனர்.

இதனால் இரு குடும்பமும் அதிர்ந்து நிலை குலைந்து போனது. இரு குடும்பங்களும் நிம்மதியின்றி அவமானத்தில் கூனிக் குறுகியது.

ALSO READ  நாங்கள் மீண்டும் மும்பைக்கு வர மாட்டோம்- புலம்பெயர் தொழிலாளர்கள்..

இந்த நிலையில் இந்த world famous love ஜோடி தற்போது தங்களின் வீடுகளுக்குத் திரும்பியுள்ளது.

இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் முகுல் கூறுகையில்:-

அவளை என்னால் ஏற்க முடியாது . ஏனெனில் உண்மையிலேயே திருந்தியதால் மீண்டும் வந்ததாக கூறினால் ஓடிப் போன உடனேயே வந்திருக்க வேண்டும். ஆனால் பல நாட்கள் உல்லாசமாக கழித்து, இப்போது சாவகாசமாக வந்துள்ளார். இன்னொரு ஆணுடன் பல நாட்கள் தங்கி விட்டு வந்தவளை என்னால் ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்.

ALSO READ  Лучшие Онлайн Казино 2023 ᐈ Списки Бонусов Отзыв

ஓடி போய் திரும்பி வந்த மாப்பிள்ளையின் அப்பாவை குடும்பத்தினர் அரைகுறையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், அவரோ தனது முன்னாள் காதலிக்கு தன்னால் ஏற்பட்ட சிக்கலுக்காக வருத்தத்தில் உள்ளார். தன்னால் தனது முன்னாள் காதலிக்கு அவரது வீட்டில் வேதனை ஏற்பட்டுள்ளதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்கிறார்.

அந்தப் பெண்மணி மிகப் பெரிய மன அழுத்தத்தில் உள்ளாராம். அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வர உறவினர்கள் முயல்கிறு வருகின்றனர். ஆனால் கணவர் தன்னை நிராகரித்து விட்டதால் அவர் பெரும் வருத்தத்தில் உள்ளாராம்.

இந்த நிலையில் காதலர் தினத்தன்று அவர்களையும், அவர்களது காதல் பற்றிய செய்திகளையும் குஜராத் மீடியாக்கள் ஒளிபரப்பியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

huawe நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Admin

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிப்பு

News Editor

பிளாஸ்டிக் பொருட்களை வரும் 2022 ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை

News Editor