இந்தியா

90% பழைய பொருட்களை கொண்டு குறைந்த செலவில் நான்கே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அழகிய வீடு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளா:-

கேரள மாநிலத்தில் ஆர்கிடெக்ட் ஒருவர் மூங்கில் மற்றும் 90 சதவீத மறு உபயோக பொருட்களை வைத்து பார்ப்போரை கவரும் வகையில் நான்கே மாதங்களில் அழகான பசுமை வீடு (Green House) ஒன்றை கட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆஷம்ஸ் ரவி  (Ashams Ravi). இவர் ஒரு ஆர்கிடெக்ட் (Architect). இந்த தான் இந்த புதுமையான வீட்டை கட்டியுள்ளார்.

ரவி குடும்பத்தார்.

இது குறித்து தெரிவித்த ஆஷம்ஸ் ரவி கூறுகையில்:-

சொந்தமாக வீடு ஒன்றைக் கட்ட வேண்டும் ஆனால் அது இயற்கைக்கு எந்த விதத்திலும் இடையூறாக இல்லாமல் இயற்கையோடு ஒன்றியதாக இருக்க வேண்டும் என்பதில் முதலில் தீர்மானமாக இருந்தேன்.

இதற்காக பழைய பொருட்கள் குறிப்பாக இடித்து விட்டு புதிய வீடு கட்டுவர் இடமிருந்து பழைய வீட்டின் ஜன்னல்கள் கதவுகள் போன்றவற்றை வாங்கி வந்து பயன்படுத்தி உள்ளேன். மேலும் மங்களூர் பகுதியிலிருந்து டைல்ஸ்களை வரவழைத்து அதை வீட்டில் பயன்படுத்தி அழகு படுத்தி உள்ளேன் என்றார்.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த வீட்டை நான்கு மாதங்களுக்குள் கட்டி முடித்துள்ளேன். இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்ட 90 சதவீத பொருட்கள் எல்லாம் மறு உபயோகம் செய்யப்பட்டவை. மேலும் பழைய பீர் பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள், மூங்கில்கள் போன்றவற்றை பயன்படுத்தி இந்த இயற்கையோடு ஒன்றிணைந்த வீட்டை அமைத்துள்ளோம் என்றார்.

ALSO READ  அமைச்சர் மீது மர்ம நபர்கள் குண்டு வீச்சு..! 

13 செண்ட் (கிட்டத்தட்ட 5662.8 சதுர அடி) அளவுள்ள நிலத்தில் 2700 சதுர அடி பரப்பளவில் வீட்டை கட்டி முடித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் சிறிதுகூட சேதம் ஏற்படாதவாறு பார்த்து பார்த்து இந்த வீட்டை கட்டி முடித்து உள்ளார் ரவி.

வீட்டில் உள்ள சாளரங்களில் பழைய மது பாட்டில்களில் வைத்து அதன் மூலம் கலர்ஃபுல்லாக வீட்டை மாற்றி அமைத்துள்ளார்.

இவரது வீட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளுக்கு கன்ஸ்டிரக்ஷன் வேலைகள் நடைபெறும் இடத்தில் தூக்கி எறியப்பட்ட இரும்புக் கம்பிகள் மற்றும் பழைய சைக்கிளில் உள்ள இரும்பு பொருட்களை பயன்படுத்திய அழகு படுத்தி உள்ளார்.

இவரது வீடு அமைந்துள்ள நிலப்பகுதியே ஒழுங்கற்ற சாய்ந்து நிலப்பகுதி என்ற காரணத்தால் வீட்டை பல்வேறு அடுக்குகளாக கட்டியுள்ளார். அதனால் ஆங்காங்கு படிக்கட்டுகள் காணப்படுகிறது.  மேலும் இவரது வீட்டின் தரை தளங்களில் டெரகோட்டா டைல்ஸ்கள் மூலமாக அற்புதமாக அழகுபடுத்தி உள்ளார். 

வீட்டின் முற்றத்தில் அழகான தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்து அவ்விடத்தில் ரம்மியமாக மாற்றியுள்ளார் ரவி.

மீண்டும் மிக குறைந்த அளவு சிமெண்ட்டை பயன்படுத்தி இந்த வீட்டை கட்டி முடித்துள்ளனர். இந்த வீட்டில் செங்கற்களை Rat Trap Bond என்ற முறையின் மூலமாக ஒன்றோடு ஒன்று பொருத்தி வீட்டை கட்டி முடித்துள்ளனர். இந்த முறையை பயன்படுத்தி வீட்டை கட்டிய காரணத்தால் செங்கல் பயன்பாட்டை கிட்டத்தட்ட 30% அளவுக்கு குறைத்துள்ளார் ரவி.

ALSO READ  MG EZS எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்
மரத்தை வெட்டாமல் அமைக்கப்பட்ட படிக்கட்டு.

இந்த முறையில் வீடுகளை கட்டமைப்பதன் மூலம் நமக்கு கிடைக்கப்பெறும் மிகப் பெரிய வசதி என்னவென்றால் வெயில் காலத்தில் வெளிப்புற வெப்ப நிலையைவிட வீட்டின் வெப்பநிலை சற்று குறைவாக இருக்கும். அதேபோல குளிர்காலத்தில் உள்ள வெளிப்புற வெப்பநிலையை விட வீட்டினுள் வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். மேலும் வெயில் காலத்தின் இரவு நேரங்களில் 3° டிகிரி அளவிற்கு வெப்பநிலை குறைவாக இருக்கும்.

இந்த வீடு அதிக வெளிச்சம் மற்றும் காற்றோட்டமாக  இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டில் மற்றொரு சாளரம் குதிரை வண்டியின் சக்கரம் (Hourse Cart Wheel) பொருத்தப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

எனவே ஆர்க்கிடெக்ட் ரவி அமைத்திருப்பது போன்று நாமும் குறைந்த செலவில் இயற்கைக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தி அழகான வீட்டை குறைந்த செலவில் கட்டி அமைக்கலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வடமாநில ஊழியர்களுக்கு மட்டும் பணிநிரந்தர ஆணை; சர்ச்சையில் சிக்கிய கிரண்பேடி..!

News Editor

வைரஸ்களின் வாயிலாகவும் கேரளம் – மிரட்டும் புதிய வைரஸ்

naveen santhakumar

Türkiye’de Glory Online Casino Giriş Çevrimiçi Slot Ve Diğer Oyunları Oynayı

Shobika