இந்தியா

கொரோனாவால் நீதிபதி ஏ.கே. திரிபாதி மரணம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


டெல்லி:-

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் நீதித்துறையைச் சேர்ந்த முதல் மரணம் நிகழ்ந்துள்ளது.

முன்னாள் நீதிபதியும் லோக்பால் அமைப்பின் உறுப்பினருமான ஏ கே திரிபாதி (62) (Ajay Kumar Tripathi) சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் தாக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ  வீரர்களுக்கு கொரோனா தொற்று; இன்றைய (MI vs SRH) போட்டி ரத்து !

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா தொற்று அனைத்து துறையினரையும் தாக்கியுள்ள நிலையில் நீதித்துறையில் கொரோனா நிகழ்த்திய முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் முதல் பெண்மணி....

இதனிடையே நீதிபதி ஏ கே திரிபாதியின் மகள் மற்றும் வீட்டில் வேலை செய்து வரும் நபர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது குணமாகி உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நாளில் 53 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

இனி ரயில் நிலையங்களில் கூகுள் wifi இல்லை…!

Admin

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க முடியும்- யுஜிசி அறிவிப்பு..

naveen santhakumar