இந்தியா

விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கிய மத்திய அரசு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு.

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 35 வது நாளை எட்டியுள்ளது  

இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 40 விவசாயிகள் சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 6- ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  

ALSO READ  "ஒரே ட்வீட்.....ஒரு லட்சம் கோடி அபேஸ்"; வருத்தத்தில் எலான் மாஸ்க் !


இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் சார்பில்  மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அம்பன் சூப்பர் புயலுக்கு பிறகு இளஞ்சிவப்பு நிறமாக மாறிய வானம்..

naveen santhakumar

என்.ஐ.ஏ சோதனை: கேரளாவில் போராட்டம்?

Shanthi

டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூட உத்தரவு! 

News Editor