இந்தியா

கிராமங்களின் கன்னட பெயரை மாற்றிய கேரளா அரசு: கர்நாடகா-கேரளா மோதல் ..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காசர்கோடு மாவட்டத்தில் கன்னட மொழியில் இருந்த கிராமங்களின் பெயர்களை மலையாள மொழியில் மாற்றியது தொடர்பாக கேரள- கர்நாடகா அரசுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கேரள – கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளது கேரளாவின் காசர்கோடு மாவட்டம். இந்த மாவட்டத்தில் கன்னடம் பேசும் அதிகமான மக்கள் மஞ்சேஸ்வர் மற்றும் எல்லையோர கிராமங்களில் வசித்து வருகின்றனர். இதனால் காசர்கோடு மாவட்டத்தில் சில கிராமங்களின் பெயர் கன்னடத்தில் உள்ளது.

இந்நிலையில் மொழியியல் நல்லிணக்கம் (ம) கலாச்சாரசகவாழ்வு என்ற பெயரில் கேரளாவின் உள்ளாட்சி அமைப்புகள் சில கிராமங்களின் பெயரை கன்னடத்திலிருந்து மலையாளத்துக்கு மாற்றியுள்ளன.

ALSO READ  கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா …!

மதுரு என்ற கிராமத்தின் பெயரை மதுரம் என்றும், மல்லா என்பதை மல்லம் என்றும் மாற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மதசார்பற்ற ஜனதாதள தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ALSO READ  கடைசி பந்தில் அசத்திய ஷாருக்கான் - கோப்பையை வென்றது தமிழகம்

இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா , கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில்,

கன்னட – மலையாள மக்கள் பரஸ்பரம் ஒற்றுமையாக சகோதரர்கள் போன்று வாழ்கின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு மொழி விஷயத்தில் எப்போதும் பிரச்னை வந்தது இல்லை.

இதை நாம் தொடர்ந்து காப்பாற்றி கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்று எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரிட்டனில் இருந்து வந்த ஆந்திர பெண்ணுக்கு கொரோனா தொற்று..!

News Editor

கொரோனா பீதி : கோழி, முட்டை உணவை உண்டு அச்சம் போக்கிய அமைச்சர்கள்..!!!!

naveen santhakumar

இளைஞரின் டுவிட்: உயிருக்கு போராடிய மூதாட்டியை காப்பாற்றிய இந்திய ராணுவம்….

naveen santhakumar