இந்தியா

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் பாதித்துள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா மிக வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,143 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  1 xBet Android iOS indir Tətbi

மேலும் 103 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 11,395 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் கீழே இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up 306 casino giriş qeydiyyat, bonuslar, yukl

Shobika

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்- RBI மறுப்பு

naveen santhakumar

முழு ஊரடங்கு… வெளியானது பரபரப்பு அறிவிப்பு!

naveen santhakumar