இந்தியா

உ.பி-ல் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என்று பெயர் வைத்த பெற்றோர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மீரட்:-

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பிறந்த இரட்டையர்களுக்கு ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிடைசர்’ என பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். 

மீரட் நகரைச் சேர்ந்த தம்பதியர் தர்மேந்திர குமார் மற்றும் ரேணு இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளன. கரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி துப்புரவு பொருள் ஆகியவற்றின் நினைவாகவும், மக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’ என்றும் ‘சானிடைசர்’ என்றும் பெயிரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ALSO READ  கொரோனா நோயாளியின் இரத்த மாதிரியை தூக்கி சென்ற குரங்கு…. 

குழந்தைகள் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும். இந்த பெயர்கள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் எனவும் குழந்தைகளின் பெற்றோர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல கடந்த மார்ச் இறுதியில் ராய்ப்பூரில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என்ற பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  உ.பி-யில் பயங்கரம்.....பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி .....!!!!

கொரோனா வைரஸ் பலிகளும் பாதிப்புகளும், சிக்கல்களும் தொடரும் இந்த நேரத்தில் இது போன்ற சிலபல விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேரலாம் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு.

Admin

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

News Editor

“முதலாளிகளுக்காக வேலை செய்யவில்லை, மக்களுக்காகத்தான் வேலை செய்கிறோம்”; நிர்மலா சீதாராமன் பேச்சு !

News Editor