இந்தியா

ராகுல் காந்தி குறித்த ரகசிய தகவலை வெளியிட்ட நிர்பயாவின் தந்தை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் துணை மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு நேற்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் இறந்த மாணவி நிர்பயாவின் தந்தை  பத்ரிநாத் சிங் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி குறித்த ரகசிய தகவலை தற்போது கூறியுள்ளார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த ஏழு வருடங்களாக எங்கள் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாகவும் மற்றும் பல்வேறு வகைகளிலும் உதவி வருகிறார். தற்போது எங்கள் மகன் விமான ஓட்டுனர் (Pilot) பயிற்சி முடித்து இண்டிகோ (Indigo) விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிகிறான். எனது மகனை பைலட்டாக காரணம் ராகுல் காந்தி தான்.

சிங்கப்பூரில் 13 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு எங்கள் மகள் இறந்தார். அந்த சமயம் நாங்கள் மிகவும் மன வேதனையில் இருந்தோம். அப்பொழுது எங்களுக்கும் எங்கள் மகனுக்கும் மருத்துவ ஆலோசனைகள் வழங்க ராகுல் காந்தி ஏற்பாடு செய்தார். அதோடு பொருளாதார ரீதியாகவும் பல்வேறு உதவிகளை வழங்கினார். இதை யாரிடமும் கூறக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

ALSO READ  தேசிய ஊரடங்கு - பிரபலங்கள் என்னென்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?

எனது மகன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு ரேபரேலியில் உள்ள இந்திராகாந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் (Indra Gandhi Rashtriya Uran Akademi) விமான ஓட்டுநருக்கான பயிற்சியில் ராகுல் காந்திதான் சேர்த்துவிட்டார். அவர் தான் எனது மகனை விமானியாக ஊக்கமளித்தார்.

ALSO READ  ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை !

எங்கள் குடும்பத்திற்கு பல்வேறு வகைகளிலும் உறுதுணையாக இருந்தவர் ராகுல் காந்தி. அவர் முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் தான் இவ்வளவு காலம் எங்களுக்கு உதவிகளை செய்துவருகிறார். நாங்கள் ராகுல் காந்திக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்று கூறினார்.

பத்ரிநாத் சிங் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பணி புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மோடி எங்களுடைய பிரதமர் : பாகிஸ்தான் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

Admin

“விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி” – எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா …!

naveen santhakumar

பீகாரில் பயங்கரம்: 12 பேர் பலி 8 பேர் மருத்துவமனையில் அனுமதி….

naveen santhakumar