உலகம்

மக்கள் வெளியே நடமாட தடை… மீறினால் 20 லட்சம் அபராதம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெர்லின்

ஜெர்மனியில் இரண்டு மாநிலங்கள் முழுவதுமாக மக்கள் நடமாட  தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியின் பெரிய மாநிலமாகவும் அதே சமயம் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாநிலமாகவும் பவேரியா (Bavaria) திகழ்கிறது.

நேற்றைய நிலவரப்படி 3000 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பிரான்ஸ் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிகச் சிறிய மாநிலமான சார்லாந்தில் (Saarland) 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த இரு மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து பவேரியா மாநில முதலமைச்சர் மார்க்கஸ் ்ஸ்யுடர் (Markus Sőder) கூறுகையில்:-

ALSO READ  கொரோனா பாதித்த உலக நாடுகள் எத்தனை??ஒவ்வொரு நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை??

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பவேரியா மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக மிக அத்தியாவசிய தேவைகள் அன்றி மக்கள் வெளியே வர கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மருத்துவமனைகள் கூட மக்கள் செல்ல வேண்டாம். மருந்தகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உணவகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழாக்கள் நடத்தவும் மக்கள் ஒன்று கூடும்  தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம். இதை மீறுபவர்களுக்கு கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.

ALSO READ  கரப்பான் பூச்சிக்கு பிரசவம்- வியக்க வைக்கும் வீடியோ

இந்த தடை உத்தரவை யாரும் மீறும் பட்சத்தில் ‘நோய் பரவல் தடுப்பு சட்டத்தின்’ (Infection control Act) கீழ் கைது செய்யப்பட்டு 25,000 யூரோக்கள் (INR 20 Lakhs) அபராதம் விதிக்கப்படும் என்று பவேரியா உள்துறை அமைச்சர் ஜோக்ஹிம் ஹெர்மன் தெரிவித்தார்.

ஒரேநாளில் ஜெர்மனியில் 13,000ஆக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரச குடும்பத்தின் கௌரவத்தை இழிவுபடுத்திவிட்டாள் என் மகள் : மேகனின் தந்தை குற்றச்சாட்டு

Admin

தனது நாட்டு போர்க்கப்பலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்…

naveen santhakumar

வாலிபரின் மூளையில் இருந்த புழுவை…. ஐந்து வருடங்கள் கழித்து….. வெற்றிகரமாக வெளியில் எடுத்த மருத்துவர்கள்…..

naveen santhakumar