இந்தியா

சீரம் நிறுவன தீ விபத்துக்கு கரணம் என்ன..? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ எனும் கொரோனா தடுப்பூசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

அந்த நிறுவனத்தின் முதலாம் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள கட்டடத்தின் 4வது மற்றும் 5வது தளங்களில் தீ தொடர்ந்து பரவி வருகிறது. அதனையடுத்து தீயணைப்பு வீரர்கள்  சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.  

இது குறித்து புனே மேயர் முர்லிதர் மோஹல் கூறியதாவது, கட்டிடத்தில் நடைபெற்ற வெல்டிங் பணியின்போது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறியுள்ளார்.


Share
ALSO READ  6வது முறையாக மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்வு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு; எய்ம்ஸ் இயக்குனர் வேண்டுகோள் ! 

News Editor

குறையும் கொரோனா; மன ஆறுதல் பெரும் மருத்துவர்கள் !

News Editor

நாடாளுமன்றத்தில் சட்டம் ரத்தாகும் வரை போராட்டம் – விவசாய சங்கங்கள்

naveen santhakumar