இந்தியா

அரசு ஊழியர்களின் ஊதியம் குறைப்பு- தெலங்கானா அரசு அதிரடி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


ஹைதராபாத்:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் நாட்டின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அரசு ஊழியர்கள், எம்எல்ஏக்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்ய தெலங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் உயர் அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று பிரகதி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்பத்தில் இந்த 21 நாட்கள் ஊரடங்கால் மாநில அரசுக்கு ஏராளமான வரிவருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். 

இதையடுத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதார்கள், முதல்வர், MLAகள், MLCகள், IAS, IPS அதிகாரிகளின் ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

ALSO READ  மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை-போலீஸ் விசாரணை:

இது தொடர்பாக தெலங்கானா மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில்:-

முதல்வர், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் மற்றும் பல்வேறு துறைகள், வாரியங்களின் தலைவர்கள், பொதுத்துறை பிரதிநிதிகள் ஆகியோரின் ஊதியம் 75 சதவீதம் குறைக்கப்படுகிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஏஐஎஸ் அதிகாரிகளுக்கான தற்போதைய ஊதியத்திலிருந்து 60 சதவீதமும், இதேபோல் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு (கெசட்டட் & நான்-கெசட்ட்), ஆசிரியர்கள் உட்பட 50 சதவீதமும் குறைக்கப்படுகிறது.

அரசு ஊழியர்களில் 4-வது நிலை ஊழியர்களுக்கும், ஒப்பந்த ஊழியர்கள், அவுட் சோர்ஸிங் பணிகள் ஆகியோருக்கு 10 சதவீத ஊதியம் குறைக்கப்படுகிறது. நான்காவது நிலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியம் 10 சதவீதமும் குறைக்கப்படுகிறது.

ALSO READ  45 பேருக்கு கொரோனா தொற்று; படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு !

பிற அரசு ஊழியர்கள், நகராட்சி, பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வூதியம் 50 சதவீதமும் குறைக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா அரசு திடீரென முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனால் அந்த மாநில அரசு ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அமைந்துள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு 2 ஆயிரம் கோடி  இழப்பு..! 

News Editor

மே 29 இல் “கொரோனா” முடிவுக்கு வரும் ! 8 மாதத்திற்கு முன்பே கணித்த “சிறுவன்” !!!!

naveen santhakumar

டெல்லியில் நான்காவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்-பொதுமக்கள் அச்சம்.. 

naveen santhakumar