இந்தியா

2500 கி.மீ. தூரத்தில் உள்ள மணமகளுக்கு தாலி கட்டி அசத்திய மணமகன்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே இருந்து 2500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணமகளுக்கு தாலி கட்டி அசத்திய மணமகன்.

வீடியோ காலில் தாலி கட்டும் மணமகன் ஸ்ரீஜித்.

கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த ஜங்கனசேரியை சேர்ந்த வங்கி ஊழியர் ஸ்ரீஜித் நடேசன் (30). உத்திரபிரதேச மாநிலம், ஹரிபட் அடுத்த பள்ளிபட் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் கேரளாவை சேர்ந்த P. அஞ்சனா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 9ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 2020 ஏப்ரல் 26 ந்தேதி திருமண தேதியும் குறிக்கப்பட்டது. முதலில் ஜனவரி மாதம் திருமண தேதி குறிக்கப்பட்டது பின்னர் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் மணப்பெண் அஞ்சனாவால் கேரளாவுக்கு வர இயவில்லை.

ALSO READ  Ставки На Футбол Fifa Рфс И Другие В Букмекерской Конторе Betboom Сделать Ставки На Футбол Онлайн В Росси

இதையடுத்து அவரவரர் வசிக்கும் இடத்தில் இருந்தே திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்று காலை மணப்பெண் அஞ்சனா , அலங்காரத்துடன்  தனது தாய் மற்றும் சகோதரருடன் வீடியோ காலில் தோன்றினார். கோட்டயத்தில் உறவினர்களுடன் காத்திருந்த மணமகன் ஸ்ரீஜித் நடேசன், செல்போனில் அஞ்சனா வீடியோ காலில் தாலியை கட்ட, அங்கு அஞ்சனா தங்கத்திலான தாலியை தனக்கு தானே கட்டிக்கொண்டார்.

மங்கலவாத்தியம் இல்லை, அடம்பரம் ஏதும் இல்லாமல் விர்சுவல் டெக்னாலஜி துணையுடன் இனிதே நடந்து முடிந்தது இந்த நவீன திருமணம்.

ALSO READ  வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் - பேருந்துகள் ஓடவில்லை ..!

ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் உறவினர் மற்றும் நண்பர்களை அழைத்து விருந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக மணமகன் ஸ்ரீஜித் நடேசன் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை மணமகன் மற்றும் மணமகள்  வீடியோ காலிங் வழியே குடும்பம் நடத்த உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் உயிரிழந்த மகனின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்

naveen santhakumar

பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது

Admin

திருடர்கள் மூலம் போலீசுக்கு கொரோனா… 17 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்….

naveen santhakumar